சன் தொலைக்காட்சி:
சேர்மன் & மேனேஜிங் டைரக்டர் - கலாநிதி மாறன்
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பேரன்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி
மாறனின் மகனும், தற்போதைய மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறனின் சகோதரும் ஆவார்
இந்த கலாநிதி மாறன்.
தி.மு.க.வுக்கு சாதகமாகவே செய்திகளை வெளியிடும் தொலைக்காட்சி இது.
(அ.தி.மு.க. அரசு கேபிள் டிவி தொழிலை அரசுடமை ஆக்குவதாக அறிவித்தால் தற்போது அரசுக்கு ஐஸ்
வைக்கும் வகையில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாகவும் செய்திகளை வெளியிட்டு வருகிறது).
தமிழகத்தில் கேபிள் டிவி தொழிலை ஆக்டோபஸ் போல தன கைக்குள் வைத்திருக்கும் சுமங்கலி கேபிள்
விஷன் சண் டிவியின் துணை நிறுவனம் என்பது குறிப்பிடத் தக்கது.